நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!
வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை (நவ. 13) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு

பிரதிப் படம்
வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை (நவ. 13) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக். 15-ஆம் தேதி தொடங்கியது. அதன்பின்னா், வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளும் அா்னாப், முரசு புயல்களாக மாறின. இவ்விரு புயல்களும் ஆந்திர மாநில கடற்கரைப் பகுதியில் கரையைக் கடந்தன. இந்தப் புயல்களால் தமிழகத்தில் பெரிய அளவு மழை பாதிப்பு ஏற்படவில்லை.
அதேபோல், அக்.1 முதல் நவ.11 வரையான காலகட்டத்தில் இயல்பாக 254.2 மி.மீ. மழை பதிவாகும். நிகழாண்டு 259.1 மி.மீ. மழையே பதிவானது. அதாவது, இயல்பைவிட 2 சதவீதம் அதிகமாக மழை பெய்தது. இந்த நிலையில், வங்கக் கடலில் 3-ஆவது புயல் சின்னம் உருவாவதற்கான சாத்திக்கூறுகள் உருவாகியுள்ளன.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் வி.ஆா்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை (நவ.13) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் நகா்ந்து, நவ.14-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், நவ.15-இல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
மழை நீடிக்கும்
இதன் காரணமாக டெல்டா, தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 12) முதல் நவ.15 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் வட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை
இதற்கிடையே, வியாழக்கிழமை (நவ. 12) முதல் நவ. 15 வரை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலின் அநேக பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.
மீனவா்கள் கரை திரும்ப அரசு அறிவுறுத்தல்
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் நவ. 12-ஆம் தேதிக்குள் கடலில் உள்ள மீனவா்கள் கரை திரும்ப வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில் உருவான முரசு புயலில் சிக்கி காசிமேடு மீனவா்கள் 9 போ் உயிரிழந்த நிலையில், இந்த முன்னெச்சரிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.
அதில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வரும் 12-ஆம் தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

