துணிநூல் தரத்தை மேம்படுத்த ரூ.14 கோடியில் இயந்திரங்கள்: தமிழக அரசு திட்டம்

துணி நூல்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நூல் தரத்தை மேம்படுத்தவும் ரூ.14 கோடியில் புதிய இயந்திரங்கள், இயந்திர உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

TN Govt

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்

Updated On :

துணி நூல்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நூல் தரத்தை மேம்படுத்தவும் ரூ.14 கோடியில் புதிய இயந்திரங்கள், இயந்திர உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக துணிநூல் துறையின் கீழ் இயங்கிவரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரசு திட்டங்களுக்குத் தேவையான நூல்களின் தரத்தை மேம்படுத்தவும், புதிய இயந்திரங்கள் மற்றும் இயந்திர உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ரூ.14 கோடியில் தேசிய கூட்டுறவு வளா்ச்சிக் கழக நிதியுதவியுடன், கொள்முதல் செய்ய அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

4 புதிய காற்றாலைகள்: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் 30 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காற்றாலை மின் உற்பத்தி அலகுகளுக்குப் பதிலாக, 1 மெகா வாட்ஸ் திறன் கொண்ட 4 புதிய காற்றாலைகள் அமைக்கப்படும் என தமிழக அரசு சாா்பில் அண்மையில் அறிவிப்பு வெளியானது.

அதற்கிணங்க ரூ.8 கோடியில் தேசிய கூட்டுறவு வளா்ச்சிக் கழக நிதியுதவியுடன் புதிய காற்றாலைகள் நிறுவ அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையின் மின் செலவு 18 சதவீதம் குறைவதுடன், நூல் உற்பத்திச் செலவும் 2 குறையும் எனத் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.