விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதிதிருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

எந்தெந்த விலையில் மின்சாரக் கொள்முதல்? டெண்டர் திறப்பு பற்றி நிர்மல் குமார் விளக்கம்

கோடைகால மின்சாரத் தேவைக்காக ஜனவரி முதல் ஜூன் வரை குறுகிய கால மின்சார கொள்முதலுக்கான டெண்டர் திறக்கப்பட்டுள்ளது குறித்து...

அமைச்சர் நிர்மல் குமார்

அமைச்சர் நிர்மல் குமார் - From Video Grab

Updated On :

கோடைகால மின்சாரத் தேவைக்காக ஜனவரி முதல் ஜூன் வரை குறுகிய கால மின்சார கொள்முதலுக்கான டெண்டர் திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் சனிக்கிழமை (நவ. 14) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிட்ட டெண்டர் திறக்கப்பட்டுள்ளது.

யூனிட் ஒன்றுக்கு ரூ. 9.50 முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

ஜனவரி - ஒரு யூனிட் ரூ.13, பிப்ரவர் - ஒரு யூனிட் ரூ.9.50, மார்ச் - ஒரு யூனிட் ரூ.10, ஏப்ரல் - ஒரு யூனிட் ரூ.10, மே - ஒரு யூனிட் ரூ.9.95, ஜூன் - ஒரு யூனிட் ரூ.13 என்ற அடிப்படையில் இந்த குறைந்தபட்ச விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு விரைவில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர் கோரப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Electricity Minister Nirmal Kumar stated on Saturday (Nov. 14) that a tender has been opened for the short-term procurement of electricity, covering the period from January to June, to meet summer power demand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.