முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்த தயாரிப்பாளர்கள் முடிவு!
முதல்வர் விஜய்க்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாராட்டு விழா நடத்துவது குறித்து...

முதல்வர் விஜய் - கோப்புப் படம்
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதற்காக முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்த ஆலோசித்து வருவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திரையரங்குகளில் கடந்த சில ஆண்டுகளாக முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் நடைமுறை இருந்து வந்தது. இந்த நிலையில், பழைய நடைமுறையான 6 மணிக்கு முதல் காட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, புதிய படம் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை 6 காட்சிகளை திரையிடலாம் என்றும், சனி - ஞாயிறு, உள்ளூர் பண்டிகை, பொதுவிடுமுறை நாள்களிலும் 6 காட்சிகளைத் திரையிட அரசு அனுமதி அளித்தது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து செய்தியாளர்களுடன் தயாரிப்பாளர்கள் பேசியதாவது, "காலை 6 மணி காட்சி குறித்த கோரிக்கை வைத்தவுடனேயே அரசு சார்பில் செய்து கொடுத்தனர். இதற்காக தமிழக அரசுக்கும் முதல்வர் விஜய் மற்றும் துறைசார்ந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கும் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரிய படங்களெல்லாம் தமிழகத்தை தவிர கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டு விடுகிறது. ஆனால், தமிழகத்தில் காலை 9 மணிக்குத்தான் திரையிடப்படுகிறது. இந்த இடைவெளியில் திரை விமர்சனங்கள் வெளியாகி திரைப்படங்களும் பாதிக்கப்படுகின்றன.
இதற்கு முன்னர் சிறு திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காமல் இருந்தது. இனிவரும் காலங்களில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
முதல்வர் விஜய்க்காக பாராட்டு விழா நடத்தி நிகழ்ச்சி நடத்த ஆலோசித்து வருகிறோம். நிகழ்ச்சிக்கு அவரின் அனுமதியும் கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ். தாணு, டி.ஜி. தியாகராஜன், முன்னாள் செயலாளர்கள் ஏ.எல். அழகப்பன், டி. சிவா, முன்னாள் பொருளாளர்கள் கஹஜாமைதீன், சந்திரபிரகாஷ் ஜெயின், வி.சி. குகநாதன், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், கமிலா நாசர், சங்கத்தின் துணைத் தலைவர் எஸ். கமலக்கண்ணன், செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Summary
Film Producers decide to hold a felicitation event for CM Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


