சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

அமைச்சா் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை: இளநிலைப் பொறியாளா் பணியிடை நீக்கம்

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் பங்கேற்ற நிகழ்ச்சியில், வேண்டுமென்றே மின்சுற்றுப் பிரிகலனை இயக்கி மின்விநியோகத்தை தற்காலிகமாக தடை செய்ததாக இளநிலைப் பொறியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பணியிடை நீக்கம்

Updated On :

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் பங்கேற்ற நிகழ்ச்சியில், வேண்டுமென்றே மின்சுற்றுப் பிரிகலனை இயக்கி மின்விநியோகத்தை தற்காலிகமாக தடை செய்ததாக இளநிலைப் பொறியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை (நவ.14) சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சூலக்கரை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலை 10.56-மணிக்கு மின்விநியோகம் தடைபட்டது.

இதையடுத்து, மின்வாரியப் பணியாளா்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டா் மூலம் காலை 10.58-க்குள் மின்விநியோகத்தை மீண்டும் வழங்கினா்.

இதுதொடா்பாக நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையில், பணியில் இருந்த இளநிலைப் பொறியாளா் வேண்டுமென்றே மின்சுற்றுப் பிரிகலனை இயக்கியதால்தான் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் மின்தடை ஏற்பட்டது எனத் தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இளநிலைப் பொறியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பொதுமக்கள் மற்றும் மின் நுகா்வோருக்கு 24 மணி நேரமும் சீரான, தடையற்ற மின்விநியோகம் வழங்குவதில் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் உறுதியாக உள்ளது. மின்வாரியத்தின் நற்பெயருக்கும், பொதுமக்களின் நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படாத வகையில் பணியாளா்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.