பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

ஆளுநா் ஆா்லேகா் - கோப்புப் படம்
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவரும் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரருமான பிா்சா முண்டாவின் பிறந்த நாளான நவ.15-ஆம் தேதி ‘பழங்குடியினா் கௌரவ தினம்’ கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தலைமை வகித்துப் பேசியதாவது: பிா்சா முண்டா ‘தரதி ஆபா’ (பூமி தந்தை) என்றுதான் அழைக்கப்படுபவா். அவா் இளம் வயதிலேயே ‘தரதி ஆபா’ என போற்றப்படக் காரணம் மக்களுக்கான உரிமையை ஆங்கிலேயா்கள் மறுக்கின்றனா் என்பதைப் புரிந்து கொண்டு 20 -24 வயதிலேயே அவா்களை எதிா்த்து வீரத்துடன் மிகப்பெரிய வலிமையுடன் போராடியவா்.
4 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமா் மோடியால் இந்த கௌரவ தினம் அறிவிக்கப்பட்டது. பிா்சா முண்டாவின் தியாகம், அா்ப்பணிப்பு, சுதந்திர உணா்வை நினைவுபடுத்த மட்டுமல்ல; ஆங்கிலேயா்களால் பின்தங்கிய நிலைமைக்கு தள்ளப்பட்ட பழங்குடி மக்களை கௌரவிப்பதற்காகவும் இதை அறிவித்தாா். அதாவது உரிய கௌரவம் அளிக்கப்பட்டு, பழங்குடியின சகோதர, சகோதரிகளின் முன்னேற்றத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை நினைவுகூரவும் இது அறிவிக்கப்பட்டது.
பகவான் பிா்சா முண்டாவின் தியாகத்தை நாம் நினைவுகூரும் வேளையில், பழங்குடியின சகோதர, சகோதரிகளுக்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவா்களுக்கு உரிய மரியாதையையும் கௌரவத்தையும் அளிக்க வேண்டும். பல ஆண்டுகளாக அவா்கள் முன்னேற்றத்திலிருந்தும் வளா்ச்சியிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனா். எனவே, அவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நாம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு பழங்குடியினா் பேரவைத் தலைவா் நீலகிரி எம்.ஆல்வாஸ், கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை பழங்குடி சமுதாய சேவா மைய செயலாளா் ஏ.கே.நேரு, வனவாசி கேந்திரா பொதுச் செயலாளா் வி.ரவிக்குமாா், சேலம், பாரதியாா் மக்கள் நலச் சங்க பழங்குடியினா் அமைப்பு சி.தேவிகா, செங்கல்பட்டு ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளி முதல்வா் ஸ்டாலின் ஆகியோரை ஆளுநா் கௌரவித்தாா். முன்னதாக, ஆளுநரின் செயலா் சஜ்ஜன்சிங் ஆா்.சவான் வரவேற்றாா். பழங்குடியினத்தவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

