நவ. 18-ல் தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்! சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகம் ஈடு இணையற்ற பங்களிப்பு: பிரதமர் மோடிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

சென்னை - கடலூர் இடையே கரையைக் கடக்கிறதா அக்வான் புயல்?

அக்வான் புயல் கரையைக் கடக்கும் இடம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்திருப்பதாவது:

akhvan

சென்னை - கடலூர் இடையே கரையைக் கடக்கிறதா அக்வான் புயல்? - படம்: ஐஎம்டி

Updated On :

அக்வான் புயல் எண்ணூர் (சென்னை) மற்றும் கடலூர் இடையே தீவிரப்புயலாகவே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் எங்கு கரையைக் கடக்கும் என்பது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்திருப்பதாவது:

தெற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நவ. 16 ஆம் தேதி புயலாகவும், நவ. 17 ஆம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெற சாதக சூழல் காணப்படுகிறது.

புயல் சின்னம் அடுத்த அடுத்த 36 மணி நேரத்திற்கு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து பின்பு மேற்கு திசையில் நகரக்கூடும்.

தொடர்ந்து, மிக மெதுவாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் நோக்கி நகர்ந்து நவ 19 ஆம் தேதி இரவு எண்ணூர் (சென்னை) மற்றும் கடலூர் இடையே தீவிர புயலாகவே கரையைக் கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயல் சின்னத்தால் நவ 17 ஆம் தேதி இரவு முதல் மழை படிப்படியாக தொடங்கி, நவம் 18, 19, 20 தேதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையக்கூடும்.

அக்வான் புயல் சென்னை நோக்கி நகர்ந்தாலும் ஒட்டுமொத்த வட கடலோர பகுதிகளுடன் தெற்கு ஆந்திர கடலோர பகுதி, இலங்கைக் கடல் பகுதி மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Private meteorologist Hemachandar has stated that Cyclone 'Akwan' is expected to cross the coast between Ennore (Chennai) and Cuddalore as a severe cyclonic storm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER