ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகள்! ஒருவர் பலி!திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு நவ. 16 வரை நீதிமன்றக் காவல்! ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கம்!அபாயத்தில் 6 லட்சம் மரங்களும் யானைகள் வாழ்விடமும்!!மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் கைது

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு!

உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக...

உப்பளத் தொழிலாளர்கள்

உப்பளம் - கோப்புப்படம்

Updated On :

உப்பளத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ. 5000-லிருந்து ரூ. 7000-ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு "வெற்றித் தமிழகம் தொலைநோக்குப் பார்வை" என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்தத் திட்டத்தில், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுடைய நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000- ஆக உயர்த்த வழிவகை செய்யப்பட்டது.

அதனடிப்படையில், தொழில் துறை அமைச்சர் 25.08.2026 அன்று நடைபெற்ற தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக்கோரிக்கையின்போது "உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்குத் தற்போது வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000- ஆக உயர்த்தி வழங்கப்படும்" என்று அறிவித்தார். 

அதன்படி, உப்பளத் தொழிலாளர்கள் மழைக்காலத்தில் உப்புத் தொழிலில் ஈடுபட முடியாத சூழலில் அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும். இதன்படி 2026-2027ஆம் ஆண்டில் 23,979 தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள். இதன்மூலம் இந்த ஆண்டிற்கு ஏற்படும் 16.78 கோடி ரூபாய் செலவினை அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.                     

Summary

Chief Minister C. Joseph Vijay has announced that the rainy-season relief amount provided to salt-pan workers will be increased from Rs. 5,000 to Rs. 7,000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.