மதுரை நகைக் கொள்ளை! மீனாட்சியின் ஃபாலோயர்கள் கிடுகிடு உயர்வு! வைரலாகும் தகவல்! அதிலும் ஒரு டுவிஸ்ட்

மதுரை நகை கொள்ளையால் னாட்சியின் ஃபாலோயர்கள் அதிகரித்தது பற்றிய தகவல்கள்..

நிஷாந்த் - மீனாட்சி

நிஷாந்த் - மீனாட்சி - instagram

Updated On :

மதுரை நகைக் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் ஈடுபட்டவர்கள், யாரோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்ல, சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்கள், தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்களைத் தெரியும் என்பதுதான் உச்சகட்ட பரபரப்பு.

முன்பெல்லாம் ஒரு வழக்கில் குற்றவாளிகளின் புகைப்படம் வேண்டும் என்றால் அதிக சிக்கல்கள் இருந்தன. இப்போது சமூக வலைத்தளப் பக்கத்தால், அவரவர் ஒரு பக்கத்தை வைத்துக்கொண்டு புகைப்படம் என்ன? விடியோக்களையே வெளியிட்டுவிடுவதால் மிகுந்த வசதியாகிவிட்டது.

மதுரை நகைக் கடையில் 11 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நிஷாந்தின் பெண் தோழி மீனாட்சியும் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படும்போது, அவரது அடையாளம் வெளியானது. அப்போதுதான் அவர் இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதும், அவரது நண்பர் நிஷாந்த் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது.

Story image

அது நாள் முதல், தொடர்ந்து பலரும் மீனாட்சியின் இன்ஸ்கிராம் பக்கத்தில் சென்று அவரது விடியோக்களை பார்த்திருக்கிறார்கள். இதனால் என்ன நடந்திருக்கிறது என்றால், கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வருவதற்கு முன்பு வெறும் 1.52 லட்சமாக இருந்த மீனாட்சியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஆனால் அதிலும் ஒரு பாரபட்சம், மீனாட்சியின் இன்ஸ்டா பக்கத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே தவிர, நிஷாந்தின் சமூக வலைத்தளப் பக்கங்கள் அப்படியேதான் இருக்கிறது. இது என்ன நியாயம் என்று நிஷாந்த் தரப்பிலிருந்து இளைஞர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

20 வயதான மீனாட்சி, அவ்வப்போது வாழ்முறை தொடர்பான விடியோக்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும், யூடியூப்பிலும் பதிவிட்டு வந்துள்ளார். அவரது விடியோக்களில், அவரது தாய் மற்றும் நண்பன் நிஷாந்த் ஆகியோரும் இடம்பெற்றிருந்ததால், செய்திகளை வெளியிடும்போது, வகைக்கு ஒன்றாக அவர்களது புகைப்படங்களும் விடியோக்களும் சேர்ந்தே வைரலாகியிருக்கிறது.

ஒரே வாரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின்தொடர்வோர் 50 ஆயிரம் பேர் அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளையும் விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர். ஒரு திருட்டில் ஈடுபட்டவர்கள் என்று தெரிந்த பிறகும் அவர்களை பின்தொடரத் தொடங்குகிறார்கள் என்றால் வளரும் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஏற்கனவே, இன்ஸ்டா பக்கத்தில் வீட்டில் இருக்கும் பணம், நகைகளை விடியோ எடுத்து வெளியிட்டு பிரபலமாகியிருந்த மதுமிதா என்ற பெண் வீட்டிலேயே பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த சம்பவத்தில், வீட்டில் இருக்கும் அனைத்தையும் அவரே விடியோ எடுத்து வெளியிட்டதோடு, அவர் வீட்டிலிருந்து புறப்படுவதையும் வெளியிட்டு திருடர்களுக்கு உதவி செய்திருந்தது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களைப் பெற்றிருந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளப் பிரபலங்களே கைதாகியிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இதுபோன்றவர்களை பின்தொடரும் இளைய தலைமுறை, இது தவறு என்று உணர்வார்களால்? இல்லை இவர்களது பக்கத்தை மட்டுமல்லாமல், இவர்களது வாழ்முறையையே பின்தொடர்வார்களா? என்ற அச்சமும் பெற்றோரிடையே அதிகரித்துள்ளது.

Summary

Information regarding the increase in Nachi’s followers following the Madurai jewelry heist.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.