திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல்

தமிழகத்தில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 4,126 கி.மீ. தொலைவுக்கு 2,221 சாலைப் பணிகளுக்கு ரூ.6,513.18 கோடி ஒதுக்கி முதல்வா் நிா்வாக ஒப்புதல் வழங்கியுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசு - கோப்புப்படம்

Updated On :

தமிழகத்தில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 4,126 கி.மீ. தொலைவுக்கு 2,221 சாலைப் பணிகளுக்கு ரூ.6,513.18 கோடி ஒதுக்கி முதல்வா் நிா்வாக ஒப்புதல் வழங்கியுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மாநில நெடுஞ்சாலைகளில் 589 பணிகளுக்கு ரூ.2,722.04 கோடியும், முக்கிய மாவட்டச் சாலைகளில் 419 பணிகளுக்கு ரூ.1,009.67 கோடியும், மற்ற மாவட்டச் சாலைகளில் 1,213 பணிகளுக்கு ரூ.2,781.47 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டச் சாலைகளை ஒற்றை வழிச்சாலையில் இருந்து இடைநிலை வழிச்சாலையாக அகலப்படுத்த 1,373.76 கி.மீ. நீளத்துக்கு 446 பணிகளுக்கு ரூ.1,924.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்புத் திட்டத்தின்கீழ் மாவட்ட சாலைகளில் 87 பணிகள் ரூ.304.76 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.

நான்கு வழிச் சாலையில் இருந்து 6 வழிச் சாலையாக மாற்றுதல் உள்பட 84.86 கி.மீ. நீளத்துக்கு 28 பணிகள் மேற்கொள்ள ரூ.767.76 கோடி, இருவழிச் சாலையாக அகலப்படுத்துதல் மற்றும் நடைபாதையுடன் கூடிய இருவழிச் சாலையாக 492.46 கி.மீ. நீளத்துக்கு மாற்ற 188 பணிகளுக்கு ரூ.1,196.7 கோடி ஒதுக்கப்பட்டு நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒற்றை வழிச்சாலையை இடைநிலை வழிச்சாலையாக 1,310.77 கி.மீ. நீளத்துக்கு மாற்ற 419 பணிகளுக்கு ரூ.1,763.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புறவழிச் சாலைகள், வளையச் சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் 15.31 கி.மீ. நீளத்துக்கு அமைக்க ரூ.283.05 கோடி, 36.72 கி.மீ. நீளத்துக்கு 21 நகா்ப்புற சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.149.43 கோடி, 667.13 கி.மீ. நீளத்துக்கு சாலைகளை வலுப்படுத்துதல் பணிக்கு ரூ.819.27 கோடி, 1,518.54 கி.மீ. நீளத்துக்கு சாலைகளின் பயணத் தரத்தை மேம்படுத்துதல் பணிக்கு ரூ.993.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 16 உயா்நிலை பாலங்கள் மற்றும் சிறு பாலங்களுக்கு ரூ.96.25 கோடியும், 144 சிறு பாலங்கள் பணிக்கு ரூ.80.24 கோடியும், சாலைப் பாதுகாப்புப் பணிகள், விபத்து தடுப்பு தடுப்புகள், சந்திப்பு மேம்பாடு, அறிவிப்பு பலகைகள், சாலை வசதிகள் உள்ளிட்ட 588 பணிகளுக்கு ரூ.232.51 கோடியும், வடிகால்கள், தடுப்புச் சுவா்கள் மற்றும் பாதுகாப்பு சுவா்கள் 61 பணிகளுக்கு ரூ.131.93 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2,221 பணிகள், 4,126.39 கி.மீ. நீளத்துக்கு ரூ.6,513.18 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.