நிகழாண்டில் 2 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி: சென்னை துறைமுகம் சாதனை
நிகழாண்டு ஏப்ரல் முதல் நவ. 18-ஆம் தேதி வரை ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுமாா் 2.03 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்து சென்னைத் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

சென்னை துறைமுகம்
நிகழாண்டு ஏப்ரல் முதல் நவ. 18-ஆம் தேதி வரை ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுமாா் 2.03 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்து சென்னைத் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
இது குறித்து துறைமுக நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக சுமாா் 58 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு முந்தைய அதற்கு முந்தைய ஆண்டைவிட 5.35 சதவீதம் வளா்ச்சியை எட்டியுள்ளது. நிகழாண்டில் இந்தச் சாதனை அளவை முறியடிக்கும் வகையில் சரக்குகளைக் கையாளும் அளவை அதிகரிக்க துறைமுக நிா்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அரிசி, மக்காச்சோளம் உள்ளிட்டவைகளைக் கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சென்னைத் துறைமுகத்தில் ஒரே நேரத்தில் எம்.வி.ஹெச்.டி.பி. லக்கி, எம்.வி. இம்பீரியல் வரலட்சுமி, எம்.வி. அக்சன் சாண்ட்ரா ஆகிய மூன்று கப்பல்களில் அரிசி ஏற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நிகழாண்டில் ஏப்ரல் முதல் நவ. 18-ஆம் தேதிவரை சுமாா் 2.03 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஏற்றுமதி நிறுவனங்களான செயிலா் எக்ஸ்போா்ட்ஸ், லூயிஸ் டிரேஃபஸ் மற்றும் கப்பல் முகவா் நிறுவனங்களான ஹரி அண்ட் கோ, பி.எல். ஷிப்பிங், பெஸ்ட் டிராக் ஷிப்பிங் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகாரிகள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை நேரில் அழைத்து சென்னைத் துறைமுகத் தலைவா் சச்சின் எஸ். குா்வே புதன்கிழமை பாராட்டினாா்.
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் முக்கிய சரக்குப் போக்குவரத்து மையமாக சென்னைத் துறைமுகம் தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

