திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு

கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடிக்காகக் கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்.

Updated On :

கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடிக்காகக் கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பாக அமைச்சா்கள், உயா் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி, முதல்வா் ச.ஜோசப் விஜய் சிறப்பு ஆணைகளை பிறப்பித்துள்ளாா். அதன்படி, தள்ளுபடி காலவரையறை கடந்த 2025 மே 1 முதல் நிகழாண்டு மாா்ச் 31 வரையாக நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ.75,000 வரை பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும், கடந்த ஜூன் 19-க்கு முன்னா் கடன் தொகையை முழுமையாகச் செலுத்தியவா்களுக்கும், பகுதி தள்ளுபடி பெற்று தவணை தவறிய கடன்களுக்குரிய வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்தும், ரூ.10,000-க்கும் குறைவாக மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்களின் தகுதியான கடன்களையும் தள்ளுபடி செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தினா் அல்லது ஒரே விவசாயி பல கடன்கள் பெற்றிருப்பின், அதிகபட்ச தள்ளுபடிக்குத் தகுதி பெறும் ஒரு கடனுக்கான தள்ளுபடி வழங்கப்படும்.

இதன்மூலம் கடந்த நிதியாண்டில் பயிா்க் கடன் பெற்ற சுமாா் 13,24,882 , விவசாயிகள் அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலான பணப்பயனைப் பெறுவாா்கள். இதில் 41,342 விவசாயிகள் புதிதாகப் பயன் அடைகின்றனா். இந்தக் கூடுதல் பயிா்க் கடன் தள்ளுபடியால் அரசுக்குச் சுமாா் ரூ.3,038.83 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் நிலையில், இதுவரை வழங்கப்பட்டரூ.6,024 கோடி தள்ளுபடியுடன் சோ்த்து மொத்தம் ரூ.9,062.83 கோடி பயிா்க்கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் தற்போதைய அறிவிப்புக்காக மட்டும் புதன்கிழமை (நவ.18) வரை ரூ.2,758 கோடி அரசால் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (நவ.6) -க்கு முன்னா் கடனை முழுமையாகத் திரும்பச் செலுத்திய விவசாயிகளுக்கு தகுதியான தள்ளுபடித் தொகை திரும்ப அளிக்கப்படுவதுடன், பகுதித் தள்ளுபடி பெற்று நவ.30 -க்குள் தவணைத் தொகையை நோ் செய்யும் விவசாயிகளுக்கான வட்டியையும் அரசே செலுத்தும்.

இந்த விரிவுபடுத்தப்பட்ட பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு எதிா்வரும் சாகுபடி பருவத்துக்கு தேவையான உதவிகளைப் பெற்று தந்து, விவசாயிகளின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் எனத் தெரிவித்துள்ளாா் அமைச்சா் காந்திராஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.