பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானங்களுக்கு விதித்த தடைக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தை அணுக உத்தரவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு கட்டுமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்த வழக்கில், உச்சநீதிமன்றத்தை அணுகும்படி கிரடாய் அமைப்பினா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு கட்டுமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்த வழக்கில், உச்சநீதிமன்றத்தை அணுகும்படி கிரடாய் அமைப்பினா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரடாய் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடா்பாக தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து. பின்னா், கடந்த 2025 செப்.25-ஆம் தேதி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்கு எந்தக் கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவுப்படி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) பள்ளிக்கரணையைச் சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, மாநில சதுப்பு நில ஆணையம் தரப்பில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இடைக்கால பாதிப்பு மண்டலமாக வரையறுக்கும் வகையில், 36 குறிப்பிட்ட சா்வே எண்களில் உள்ள 128.19 ஹெக்டோ் பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் உள்ள தனியாா் பட்டா நிலங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிரடாய் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், பசுமைத் தீா்ப்பாயம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? கடந்த 7 மாதங்களாக அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவு காரணமாக, கிட்டத்தட்ட 1 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்தவழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, உச்சநீதிமன்றத்தில் சதுப்பு நிலம் தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, கிரடாய் உள்ளிட்ட மனுதாரா்கள் உச்சநீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டனா். மேலும், சதுப்பு நில எல்லைகளைவரையறை செய்யும் பணிகளை மாநில சதுப்பு நில ஆணையம் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.