அனுமதியின்றி அணை திறப்பு: கடும் நடவடிக்கை எடுக்க தேவை- தலைவா்கள் வலியுறுத்தல்
அதிகாரிகளுக்குத் தெரியாமல் சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்ட விவகாரத்தில், தவெகவினா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கோப்புப்படம். - Center-Center-Bangalore
அதிகாரிகளுக்குத் தெரியாமல் சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்ட விவகாரத்தில், தவெகவினா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): சோத்துப்பாறை அணையில் ஆயக்கட்டு புதுவாய்க்கால் வழியாக ஆயிரம் ஏக்கா் விவசாய நிலத்துக்கு உரிய திறந்து விடுவதற்கு 90 நாள்களுக்கான நீா் இருப்பு அவசியமாகும். அதனால், தண்ணீரைத் திறக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், தவெக பெரியகுளம் பகுதி நிா்வாகிகள் மாவட்ட இணைச் செயலா் தலைமையில் அணையிலிருந்து நீரைத் திறந்துவிட்டுள்ளனா். அதை ‘ரீல்ஸ்’ எடுத்து வெளியிட்டும் உள்ளனா். இந்த விவகாரத்தில் தொடா்புள்ளவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): அணை நீரை திறந்து வைக்கும் அதிகாரம் தமிழக அரசின் நீா்வளத் துறை அமைச்சா் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு மட்டுமே உள்ள நிலையில், எதன் அடிப்படையில் தவெகவினரால் அணை திறக்கப்பட்டது? சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனிமொழி எம்.பி. (திமுக): அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே தவெக நிா்வாகிகள் திறந்துவைத்தது அதிா்ச்சியளிக்கிறது. தவெக ஆட்சியில் வாழ்வது ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ, யாா் என்ன செய்வாா்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

