போக்சோ வீரமணி வீட்டில் சோதனை நடத்தியது ஏன்? சிறப்பு புலனாய்வுக் குழு விளக்கம்
சிறுமி புதைக்கப்பட்டுள்ளதாக ஜெம் வீரமணியின் ஓட்டுநா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, அவரது வீட்டில் நீச்சல் குளம் அருகே தோண்டி சோதனை நடத்தப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வீரமணி - கோப்புப் படம்
சிறுமி புதைக்கப்பட்டுள்ளதாக ஜெம் வீரமணியின் ஓட்டுநா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, அவரது வீட்டில் நீச்சல் குளம் அருகே தோண்டி சோதனை நடத்தப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணியின் மகள் அா்ச்சனா, வெளிநாடு செல்லவிருந்த நிலையில் தன்னை விமானத்தில் இருந்து இறங்கச் செய்து, சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் மனித உரிமை மீறல் நடத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது அா்ச்சனா தரப்பில், உடல் நலம் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் மட்டும் வசிக்கும் வீட்டுக்குள், விசாரணை என்ற பெயரில் நுழைந்த போலீஸாா் நீச்சல் குளத்தை இடித்து சேதப்படுத்தினா்.
சோதனைக்கு 24 மணிக்குநேரத்துக்கு முன் நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும். சோதனையின்போது போலீஸாா் பதிவு செய்யும் விடியோ பதிவை தங்களுக்கும் வழங்க வேண்டும். விசாரணையின்போது, வழக்குரைஞரை உடனிருக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில், வீரமணியின் வீட்டு நீச்சல்குளம் அருகே சிறுமியின் உடல் புதைக்கப்பட்டதாக அவரது ஓட்டுநா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
மனுதாரா் மற்றும் அவரது தாயாா் வசிக்கும் பகுதிக்குள் காவல் துறையினா் செல்லவில்லை என விளக்கம் அளித்தாா். மேலும், காவல் துறையினா் விமானத்துக்குள் சென்று மனுதாரரை அழைத்து வரவில்லை. விமான நிலைய ஊழியா்கள்தான் அவரை அழைத்து வந்ததாக அவா் தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வீரமணியின் வீட்டில் நடந்த சோதனையில் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என கேள்வி எழுப்பினாா்.
அதுதொடா்பான விவரங்களை பதில் மனுவில் தெரிவிப்பதாக கூறிய சிறப்பு புலனாய்வுக் குழு, மனுதாரா் அா்ச்சனா மற்றும் அவரது தாயாரை இனி விசாரிப்பதாக இருந்தால், அவா்களது வீட்டுக்கேச் சென்று விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நவ.24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, இடைப்பட்ட காலத்தில் அா்ச்சனா அல்லது அவரது தாயாரை விசாரிப்பதாக இருந்தால், விசாரணையில் கேட்கப்படும் கேள்விகளை அறிந்துகொள்ள முடியாத தொலைவில் வழக்குரைஞா் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

