மகள் மீது அவதூறு! காவல் ஆணையர் அலுவலகத்தில் அர்ஜுன் புகார்!

மகள் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை..

Arjun files a complaint

புகாரளிக்க வந்த நடிகர் அர்ஜுன் - video crop

Updated On :

மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் அர்ஜுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளியிலும் ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைப் பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நடிகர் அர்ஜுன் புகார் அளித்துள்ளார்.

தனது இளைய மகள் அஞ்சனாவின் திருமணத்தைத் தொடர்ந்து, மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும், விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியதாக அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

மகளின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இதுவரை அமைதி காத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது தனது மகளையும், அவரது குழந்தையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துகள் பரப்பப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, எவ்வித ஆதாரமும் இன்றி தனது மகளை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் எனச் சித்தரித்து அவதூறு பரப்பப்படுவதாகவும், இதுபோன்ற கருத்துகள் ஒரு பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் என்பதற்காக அவர்களது குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும், தங்களது அமைதியைத் தவறுகளை ஏற்றுக்கொள்வதாகக் கருதக்கூடாது என்றும் அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பி வரும் சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை காவல்துறையிடம் நடிகர் அர்ஜுன் புகார் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.