உங்கள் பெயரில் பிஎஃப் கணக்கு இருக்கிறதா? இனி கொண்டாட்டம்தான் போங்க!நிரம்பி வழியும் சபரிமலை முன்பதிவு! வருவதோ பாதி பக்தர்கள்! சிக்கலில் கோயில் நிர்வாகம்!திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்கனிம வளங்கள் கொள்ளை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடிசிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த நவ. 22 வரை அவகாசம்

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவு: அமைச்சர் அருண்ராஜ் இரங்கல்

கொளத்தூர் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவுக்கு அமைச்சர் அருண்ராஜ் அஞ்சலி செலுத்தியது குறித்து...

Death of Kolathur MLA V.S. Babu

கொளத்தூர் தொகுதி மறைந்த தவெக சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சர் அருண்ராஜ் - டிஎன்எஸ்

Updated On :

கொளத்தூர் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவுக்கு அமைச்சர் அருண்ராஜ் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் 70 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை (நவ. 19) மதியம் 2.24 மணியளவில் வி.எஸ். பாபு சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூரில் அவரது வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலுக்கு முதல்வர் விஜய் உள்பட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், வி.எஸ். பாபுவின் உடலுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு நம்மை விட்டுப் பிரிந்திருப்பது மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. அனைவரிடமும் அன்பாகவும், இயல்பாகவும், உரிமையுடனும் பழகக்கூடிய சிறந்த பண்பாளர் அவர். அவரது அரசியல் பயணம் மிகவும் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்திருப்பது வருத்தமளிக்கிறது.

அவருடன் தொடர்புடைய நினைவுகளும், அரசியல் அனுபவங்களும் மிகவும் சுவாரசியமானவை மட்டுமின்றி ஆச்சரியமளிக்கக்கூடியவை. அவரது உடல்நலக் குறைவு காரணமாக சிறந்த மருத்துவக் குழுவினர் ஒருங்கிணைந்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

அமைச்சரின் உத்தரவின்பேரில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் தனியார் மருத்துவமனைக்கே நேரில் சென்று அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை வழங்கினர். மேலும், முதலமைச்சரும் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து நாள்தோறும் கேட்டறிந்து வந்தார்.

இன்னும் இரண்டு, மூன்று நாள்களில் அவர் குணமடைந்து வீடு திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

வி.எஸ். பாபுவின் குடும்பம் மிகப்பெரிய கூட்டுக் குடும்பமாகும். அவரது மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, அரசியல் நண்பர்கள், தோழர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் தோழர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

Death of Kolathur MLA V.S. Babu: Minister Arunraj expresses condolences

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.