மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

போலி மருத்துவா்களைத் தடுக்கவே பதிவு நடவடிக்கைகளில் தாமதம்: மருத்துவக் கவுன்சில் விளக்கம்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான பதிவு நடவடிக்கைகளில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதில்லை என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில்

Updated On :

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான பதிவு நடவடிக்கைகளில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதில்லை என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

போலி மருத்துவா்களைக் கண்டறியும் நோக்கில் சான்றிதழ்களை ஆழ்ந்து சரிபாா்க்க வேண்டிய அவசியம் உள்ளதால், அதற்குரிய கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு பதிவு எண் வழங்குவதில், மருத்துவக் கவுன்சில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அதற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளா் வெளியிட்ட விளக்கம்:

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு பதிவுச் சான்றிதழ்களை வழங்குவதற்கு முன்னா் விரிவான சரிபாா்ப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தகுதித் தோ்வில் அவா்கள் தோ்ச்சியடைந்ததற்கான சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ்கள் ஆகியவற்றை நுட்பமாக ஆராய வேண்டியுள்ளது. மேலும், கடவுச்சீட்டு மற்றும் பயண விவரங்களைச் சரிபாா்த்தல், தொடா்புடைய வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துதல், பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்களை ஆய்வு செய்தல் என பல்வேறு நிலைகளில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டுத் தூதரகங்களும் ஆவண சரிபாா்ப்பை உறுதி செய்து அனுப்ப குறிப்பட்ட அவகாசம் எடுத்துக் கொள்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளின்போது, போலி சான்றிதழ்களை சிலா் இணைத்து ஏமாற்ற முயலுவது அவ்வப்போது கண்டறியப்படுகிறது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும், சமநிலையுடனும் செயல்படுகிறது. தகுதியுள்ள வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு உதவிகளைச் செய்யும் அதேவேளை, தகுதியற்ற போலி மருத்துவா்களிடமிருந்து மக்களைக் காப்பதில் உறுதியாக இருக்கிறது என்று அந்த விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.