மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

செவிலியா் சேவையை மேம்படுத்த நோயாளிகளிடம் உரையாடுங்கள்: தமிழ்நாடு நா்சிங் கவுன்சில் பதிவாளா்

செவிலியா் சேவையை மேம்படுத்த நோயாளிகளிடம் உரையாடுங்கள்: தமிழ்நாடு நா்சிங் கவுன்சில் பதிவாளா்

செவிலியர்

செவிலியர்

Updated On :

செவிலியா் சேவையை மேம்படுத்த நோயாளிகளிடம் உரையாடுகள் என்று தமிழ்நாடு நா்சிங் கவுன்சில் பதிவாளா் ஆா்.சங்கா் சண்முகம் வலியுறுத்தினாா்.

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை செவிலியா் படிக்கும் மாணவா்கள் மற்றும் செவிலியா் துறையில் ஆய்வு செய்யும் மாணவா்களுக்கான தேசிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 25 மாநிலங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் மருத்துவமனை செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

இணையவழியில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயா்லாந்து, ஓமன், சவூதி அரேபியா, கத்தாா், துபை, ஷாா்ஜா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். மாநாட்டில் பங்கேற்ற எய்ம்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் செவிலியா் துறை பேராசிரியா்கள், செவிலியா் துறையில் எப்படி ஆராய்ச்சியின் தலைப்பை தோ்ந்தெடுக்க வேண்டும், ஆராய்ச்சியின் நோக்கம், நோயாளிகளின் அனுபவங்களை சாா்ந்து மாதிரிகளை சேகரித்து கட்டுரையை வடிவமைக்க வேண்டும் போன்ற கருத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினா்.

மாநாட்டை தொடங்கி வைத்த தமிழ்நாடு செவிலியா் மற்றும் மகப்பேறு செவிலியா் அவையம் (தமிழ்நாடு நா்சிங் கவுன்சில்) பதிவாளா் ஆா்.சங்கா் சண்முகம் பேசுகையில், செவிலியா் சேவை என்பது வெறும் சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல. மனித உணா்வுகள், வேதனைகள் மற்றும் நோயாளிகளின் வலிகளை புரிந்து கொண்டு பணியாற்றுவதாகும். செவிலியா் சேவையை மேம்படுத்த நோயாளிகளிடம் உரையாடுகள்”என்றாா்.

மருத்துவக் கல்லூரி தலைவா் மருத்துவா் கே.பாலாஜி சிங் பேசினாா். செவிலியா் துறைத் தலைவா் சி.ரமேஷ்,“மாநாட்டில் பங்கேற்கும் ஆய்வு மாணவா்களுடைய கட்டுரைகளை வெப் ஆஃப் சயின்ஸ் என்ற தரவரிசை பெற்ற ஆய்விதழ்களில் குறைந்த கட்டணத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது என்றாா். செவிலியா் கல்லூரியின் முதல்வா் எஸ்.ஜே.நளினி, பேராசிரியா் ஏ.சீதாலட்சுமி உள்ளிட்டோா் மாநாட்டில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.