உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் மறைவு: அமித் ஷா இரங்கல் வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தீபம்! தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!

எதிர்கட்சி எனில் வேகம் காட்டும் காவல்துறை போலி புத்தக முறைகேட்டில் வழக்குப் பதியாதது ஏன்? நீதிமன்றம் கேள்வி

எதிர்கட்சி எனில் வேகம் காட்டும் காவல்துறை போலி புத்தக முறைகேட்டில் வழக்குப் பதியாதது ஏன்? என நீதிமன்றம் கேள்வி

chennai hc

உயர் நீதிமன்றம் கேள்வி - கோப்பிலிருந்து..

Updated On :

எதிர்கட்சியினர் தொடர்பான வழக்கு எனில் வேகம் காட்டும் காவல்துறை, போலி புத்தக முறைகேட்டில் வழக்குப் பதியாதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, அரசு அதிகாரிகள் மீது ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருவள்ளூரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ-வுமான பிரகாசம் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த ஒருவரிடம் பிரகாசம் தவறான முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், திருவள்ளுவர் நகர் போலீசார் பிரகாசம் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து பெரியார் அறிவுலகம் தொடர்பான வழக்கை குறிப்பிட்டு, காவல்துறை தரப்பு வழக்குரைஞரிடம், அரசு அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவியின்றி எப்படி அரசியல்வாதிகளால் லஞ்சம் பெற முடியும்? பெயர் தெரியாத பதிப்பகங்களுக்கு புத்தகங்களை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்தது யார்? இந்த விவகாரத்தில் தொடர்புடைய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? ஆனால் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் எனில், காவல்துறை வேகமாக செயல்படுகிறது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு காவல்துறை தரப்பில், புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருவதாவும், வரும் திங்கள்கிழமை இதுகுறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்வதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.