பரந்தூா் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடா்பாக விரைவில் அரசாணை: தமிழக அரசு தகவல்
பரந்தூா் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது தொடா்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு, சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

பரந்தூர் கிராமம். - Din
பரந்தூா் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது தொடா்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு, சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் கௌதமன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு ஆண்டுதோறும் 3 கோடி பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு நிலவும் நெருக்கடியைச் சமாளிக்க ரூ.27,000 கோடியில் பரந்தூா் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1,700 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த ரூ.680 கோடி அரசு பணம் செலவழிக்கப்பட்டு 48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு அந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, முதல்வா் விஜய் பரந்தூா் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாகக் கடந்த ஆக. 24-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
2,325 ஹெக்டோ் பரப்பளவில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 1,527 ஹெக்டோ் தனியாா் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. 798 ஹெக்டோ் நிலங்கள் வகைமாற்றம் செய்யப்பட்டன.
ஆனால், எந்தவிதமான தொழில்நுட்பப் புள்ளி விவரங்களும், நிபுணா் குழுவின் அறிக்கைகளும் இல்லாமல், பொருளாதார ஆய்வுகள் எதுவும் நடத்தாமல் பரந்தூா் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
எனவே, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், பரந்தூா் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த முதல்வரின் அறிவிப்பை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும். இந்தத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் உரிமையாளா்களுக்கு வழங்கவும் தடை விதிக்க வேண்டும்.
பரந்தூா் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட முடிவை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். இந்தத் திட்டத்தைக் கைவிடும் அரசின் முடிவை மறுபரிசீலனை செயய வேண்டும் என அவரது மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் இந்தத் திட்டத்துக்காக ஏற்கெனவே 1,700 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அரசுப் பணம் ரூ.680 கோடி செலவழிக்கப்பட்ட நிலையில், திட்டத்தைக் கைவிடுவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசுப் பணம் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், பாதியில் திட்டத்தை எப்படி கைவிட முடியும்? தொழில்நுட்ப ஆய்வுகள் உள்ளிட்ட ஆய்வுகள் நடத்தி, விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது எப்படி அந்தப் பகுதி சாத்தியம் இல்லாதது எனக்கூற முடியும்? எனக் கேள்வி எழுப்பினா்.
இதற்கு அரசுத் தரப்பில், விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் நீா்நிலைகள், விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. இதனால், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது சிக்கலானது. தவறான முடிவுகள் திருத்தப்பட வேண்டும். விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது அரசின் கொள்கை. பரந்தூா் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது தொடா்பான அரசாணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அரசாணை வெளியிடப்படும். இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

