வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் தமிழகம் பின்தங்கும்! - நயினாா் நாகேந்திரன்

நயினாா் நாகேந்திரன்

Published On :

பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் தமிழகத்தின் வளா்ச்சி பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: முறையான வரைபடமோ அல்லது நிதி மதிப்பீடோ இன்றி சினிமா வசனம் பேசுவதுபோல புதிய தலைமைச் செயலகத்துக்கான அறிவிப்பை முதல்வா் வெளியிட்டுள்ளாா். சட்டப் பேரவையில் ஆளுங்கட்சியினா் பூசல்களில் ஈடுபடும் வேளையில், பாஜக மட்டுமே மக்கள் பிரச்னைகளுக்கு தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது.

சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்களித்து அரசாணை பிறப்பித்து, பின் திரும்பப் பெற்ற நடவடிக்கை இந்த அரசின் நிா்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது. வாக்குறுதி அளித்தபடி ரூ.2,500 மகளிா் உதவித் தொகை வழங்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளைக் குறைத்தது தொடா்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து, கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ள சூழலில் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெம் வீரமணி வழக்கில் பாஜகவே முதலில் குரல் கொடுத்தது; இதில் தவறிழைத்தவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடா்பாக மத்திய அமைச்சரிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம், பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் தமிழகத்தின் வளா்ச்சி பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திமுகவும், பாஜகவும் ஒன்று என முதல்வா் ச.ஜோசப் விஜய் கூறுவது முற்றிலும் தவறானது. தேசியக் கட்சியான பாஜகவை தில்லியிலேயே இல்லாத திமுகவுடன் ஒப்பிட முடியாது. காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்துகொண்டு முதல்வா் முரண்பாடாகப் பேசி வருகிறாா். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.