குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!

‘திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?’ - மு.க. ஸ்டாலின் கேள்வி!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் விஜய் - மு.க. ஸ்டாலின்.

Updated On :

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டியது திமுக; முதல்வரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்தாண்டு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்துக்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம.ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் அங்குள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு அருகில், மலையின் உச்சியில் விளக்கு ஏற்றுவதாக சர்ச்சை எழுந்தது.

இந்த விவகாரத்தில் தீபம் ஏற்றப்படும் இடம் தர்காவின் பகுதிக்கு வெளியே உள்ள கோயில் நிலம் என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றும் சடங்கை நடத்த அனுமதித்தார். ஆனால், சட்டம்-ஒழுங்கு கவலைகளைக் காரணம் காட்டி உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் தனி நீதிபதி தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஜன. 6-ல் உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கடந்த ஜூன் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ‘நவ. 24' அன்று கார்த்திகை தீபம் பண்டிகை நெருங்கி வருவதால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கல் தூணில் தீபமேற்றும் மரபோ வழக்கமோ முன்னர் இருந்ததில்லை என எதிர் மனுதாரர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். ஆகையால், தீபத் தூண் விவகாரத்தில் முன்பு இல்லாத நடைமுறை, மரபை உத்தரவின் மூலம் அனுமதிக்கக் கூடாது என அரசின் தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உத்தரவு பிறப்பிப்பது குறித்த விவகாரங்களை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் எந்த அளவுக்குத் தலையிட முடியும் என நீதிமன்றம் விரிவான விசாரணை மேற்கொண்டது. இதில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய 6 வார கால அவகாசம் அளிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், தீபத் தூணில் தீபமேற்ற இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், கார்த்திகை திருநாளில் மட்டும் தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது.

த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை முதல்வர் விஜய் அவர்கள் விளக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

DMK president M.K. Stalin has questioned what the Chief Minister's next course of action will be, noting that the DMK has ensured the restoration of peace regarding the Thiruparankundram issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.