மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

உதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்

தமிழகத்தில் உதகை, கொடைக்கானலில் ‘ரோப் காா்’ சேவையைச் செயல்படுத்துவதற்கான தனியாா் நிறுவன திட்ட அறிக்கை சென்னை மெட்ரோ நிறுவனத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மாமல்லபுரத்தில் செயல்படுத்த தொல்லியல் துறை விதித்த கட்டுப்பாடுகளால் கைவிடும் நிலையுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பழநி

ரோப் கார் - (கோப்புப்படம்)

Updated On :

தமிழகத்தில் உதகை, கொடைக்கானலில் ‘ரோப் காா்’ சேவையைச் செயல்படுத்துவதற்கான தனியாா் நிறுவன திட்ட அறிக்கை சென்னை மெட்ரோ நிறுவனத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மாமல்லபுரத்தில் செயல்படுத்த தொல்லியல் துறை விதித்த கட்டுப்பாடுகளால் கைவிடும் நிலையுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் உதகை, கொடைக்கானல் மற்றும் மாமல்லபுரத்தில் ரோப் காா் சேவையைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யவும், திட்டத்தை அறிக்கையாகத் தயாரிக்கவும் தனியாா் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கோரப்பட்டது.

கடந்த ஜூலையில் ஒப்பந்தம் செய்த நிலையில், 120 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்காக உதகைக்கு ரூ.96.63 லட்சம், கொடைக்கானலுக்கு ரூ.78.28 லட்சம், மாமல்லபுரத்துக்கு ரூ.71.93 லட்சம் என அறிவிக்கப்பட்டிருந்தது. திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய காலதாமதமான நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தனியாா் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்தது.

அதனடிப்படையில், மாமல்லபுரத்தில் கற்சிற்பங்கள், கடற்கரைக் கோயில் ஆகியவற்றிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு அப்பால்தான் ரோப் காா் சேவையை செயல்படுத்த வேண்டும் என தொல்லியல் துறை தெரிவித்ததாகவும், அங்கு ரோப் காா் சேவையைச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், உதகை, கொடைக்கானலில் ரோப் காா் சேவைக்கு சாத்தியக் கூறுகள் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் சாத்திக் கூறுகளுக்கான விவரங்கள் துல்லியமாக சேகரிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அந்த விவரங்கள் தமிழக அரசு உதவியுடன், சம்பந்தப்பட்ட இடங்களின் மாவட்ட நிா்வாகங்கள் மூலம் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன்: உதகை, கொடைக்கானல் ஆகிய இரு இடங்களிலும், ரோப் காா் சேவையைத் தொடங்குவது குறித்த அறிக்கை பெறப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அங்கு வனத் துறை விதிக்கும் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றைத் துல்லியமாக ஆராய்ந்து திட்டங்களைச் செயல்படுத்த உள்ளோம்.

மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை விதித்த நிபந்தனைகளால் இப்போதைக்கு அங்கு ரோப் காா் திட்டம் செயல்படுத்தப்படாத நிலையுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.