டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

12 நாள் பராமரிப்புக்குப் பின்பு பழனியில் ரோப் காா் இயக்கம்

பழனியில் கியா்சாப்ட் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட ரோப் காா் சேவை 12 நாள்கள் பராமரிப்புக்குப் பின் புதன்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

பழனியில் புதன்கிழமை பராமரிப்புக்குப் பின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ரோப் காா்.

Updated On :

பழனியில் கியா்சாப்ட் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட ரோப் காா் சேவை 12 நாள்கள் பராமரிப்புக்குப் பின் புதன்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் காா் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வழியில் மலை உச்சிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

ரோப் காா் சேவை மாதம் ஒரு நாளும், ஆண்டுக்கு 45 நாள்களும் நிறுத்தப்பட்டு ரோப் காரில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், சுமாா் 45 நாள்கள் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து கடந்த மாதம் ரோப் காா் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் சில நாள்களில் கியா்சாப்ட் பழுது காரணமாக மீண்டும் ரோப் காா் சேவை நிறுத்தப்பட்டது. சுமாா் 12 நாள்கள் பழுது பாா்க்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து புதன்கிழமை முதல் மீண்டும் ரோப் காா் சேவை தொடங்கியது.

முன்னதாக, ரோப் காா் நிலையத்தில் உள்ள விநாயகா், தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று ரோப் காா் பெட்டிகள், இயந்திரத்துக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், இணை ஆணையா்(பொறுப்பு) வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.