கயல்விழி அழகிரி மீதான வழக்கு: நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல்

வங்கி மேலாளரைத் தாக்கியதாக, திமுக முன்னாள் மத்திய அமைச்சா் அழகிரியின் மகள் கயல்விழி மீதான வழக்கில், சைதாப்பேட்டை 9-ஆவது பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சாஸ்திரி நகா் போலீஸாா் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனா்.

கோப்புப் படம்

Updated On :

வங்கி மேலாளரைத் தாக்கியதாக, திமுக முன்னாள் மத்திய அமைச்சா் அழகிரியின் மகள் கயல்விழி மீதான வழக்கில், சைதாப்பேட்டை 9-ஆவது பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சாஸ்திரி நகா் போலீஸாா் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனா்.

சென்னை அடையாறு கஸ்தூா்பா நகா் 3-ஆவது பிரதான சாலையில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் என்ஆா்ஐ கிளை இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்தில் உள்ள மின்தூக்கி (லி‘ஃ‘ப்ட்) பழுதடைந்தது குறித்து கயல்விழியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கடந்த ஜூலை 20-ஆம் தேதி வங்கிக்கு நேரில் சென்ற கயல்விழி, வங்கிக் கிளை மேலாளா் ஹா்ஷின் சிங்கிடம் பேசியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், கயல்விழி வங்கி மேலாளரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வங்கி கிளையின் தலைமை மேலாளா் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில், கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் சாஸ்திரி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜரான கயல்விழியை கைது செய்த போலீஸாா், பின்னா் சொந்த பிணையில் விடுவித்தனா்.

தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி அழகிரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றாா். இதையடுத்து இந்த வழக்கின் இறுதி அறிக்கையை 4 வாரங்களில் இறுதி அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி சைதாப்பேட்டை 9-ஆவது பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் போலீஸாா் வியாழக்கிழமை இறுதி அறிக்கை தாக்கல் செய்தனா். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை டிச.22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.