ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள்: விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர் முருகன் கோயில்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வெள்ளிக்கிழமை(நவ.20) ஒரே நாளில் நடைபெற்றன. 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் குறித்து...

திருச்செந்தூர் முருகன் கோயில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் - எக்ஸ்
தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வெள்ளிக்கிழமை(நவ.20) ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக திருவிழாக்கள், சுபமுகூர்த்த நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்கிறது என்று இந்து சமய அறநிலையத்துறை வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை சுப முகூர்த்த நாள் என்பதால், மணமக்கள், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிகாலையிலேயே கோயிலுக்கு வரத் தொடங்கியதால் கோயில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது
கோயில் வளாகம் மற்றும் சண்முக விலாஸ் மண்டபத்தில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் அங்கு பெரும் கூட்டம் காணப்பட்டது; மணமக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிலர் திருமணம் முடிந்த கையொடு கடற்கரை அருகே போட்டோஷூட் நடத்தினர்.
இதற்கிடையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிக்கிழமை காலை முதலே கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலை குளிரையும் பொருள்படுத்தாமல், பக்தர்கள் கடலிலும், 'நாழிக்கிணறு' எனப்படும் புனிதக் கிணற்றிலும் நீராடினர். பின்னர், இறைவனை தரிசிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
முருகப்பெருமானை தரிசிப்பதற்காக, பக்தர்கள் பொது வரிசையிலும் ரூ.100 கட்டண சிறப்பு தரிசன வரிசையிலும் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Over 100 weddings were solemnised in a single day at the Subramaniya Swamy Temple in Tiruchendur, one of the six abodes of Lord Murugan, on November 20.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


