சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழா: பந்தக்கால் முகூர்த்தம்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில், மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது குறித்து...

சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயிலில், மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கீழரத வீதியில் உள்ள தோடியில் கோயில் பொது தீட்சிதர்களால் இந்தப் பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஜெயசூர்யா தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் கு. ராஜகணேச தீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேர்த்திருவிழா டிசம்பர் 23-ஆம் தேதி புதன்கிழமையும், மறுநாள் டிசம்பர் 24-ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Pandakkal Muhurtham took place on Sunday ahead of the Margazhi Arudra Darshan festival at the Chidambaram Natarajar Temple.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

