எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் குறைப்பு: ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கான ஒருநாள் ஊதியம் குறைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து...

Reduction in wages of sanitation workers

உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை ரூ.832-லிருந்து, ரூ.762 ஆக குறைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கான ஒருநாள் ஊதியம் குறைக்கப்பட்டதற்கு எதிராக, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 24 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு 2026 ஏப்ரல் முதல் 2027 மார்ச் வரை தினக்கூலியாக ரூ.832 ஆக நிர்ணயித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த ஊதியத்தை ரூ.762 ஆக குறைத்து கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தூய்மைப் பணியாளர்கள் ஒரு நாளைக்கு ரூ.70 மாதம் ரூ.2100-ஐ இழக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஏப்ரல் முதல், அக்டோபர் 5 ஆம் தேதி வரை ரூ.70 பாக்கி ஊதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், ரூ.832 ஊதியத்தை ரூ.762-ஆக குறைத்த உத்தரவை ரத்து செய்தும், மீண்டும் பழைய ஊதியத்தையே வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Reduction in wages of sanitation workers: High Court directs Commissioner to respond

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.