சிபிஎஸ்இ வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் ரகசியம் பற்றி தெரியுமா?திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!சபரிமலையில் அனுமதிக்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனு; விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டுதிருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல 2-ஆவது நாளாக தடை!திருப்பரங்குன்றம் தீபம்! தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைவு!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கேதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பூட்டிக் கிடக்கும் மாநகராட்சி பள்ளி! கிடங்காகப் பயன்படுத்தும் அவலம்!

ஆவடி அருகே பட்டாபிராமில் மாணவர்களின் எண்ணிகை குறைந்ததால், மாநகராட்சி தொடக்கப்பள்ளி பூட்டப்பட்டு, கிடங்காகப் பயன்படுத்தி வருவது பற்றி...

Avadi municipal corporation school lies shut due to a decline in student enrollment

பட்டாபிராம் சாஸ்திரி நகரில் பூட்டப்பட்டு கிடங்கும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி. - DIN

Updated On :

ஆவடி அருகே பட்டாபிராமில் மாணவர்களின் எண்ணிகை குறைந்ததால், மாநகராட்சி தொடக்கப்பள்ளி பூட்டப்பட்டு, கிடங்காகப் பயன்படுத்தி வரும் அவலத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆவடி மாநகராட்சி, 15-ஆவது வார்டு பட்டாபிராம் சாஸ்திரி நகரில் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பால விநாயகர் கோயில் தெருவில் ஆவடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்டோர் பயின்று வந்தனர். காலப்போக்கில் படிப்படியாக இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

இப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் 8 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மொத்தம் 22 மாணவ- மாணவியர் பயின்றதாகக் கூறப்படுகிறது.

பட்டாபிராம் சாஸ்திரி நகரில் பூட்டப்பட்டு கிடங்கும்  மாநகராட்சி தொடக்கப்பள்ளி.

பட்டாபிராம் சாஸ்திரி நகரில் பூட்டப்பட்டு கிடங்கும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி. - DIN

இப்பள்ளியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்பு, இப்பள்ளி அதிகாரிகளால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது. அண்மையில் இப்பள்ளி பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது. தற்போது, இப்பள்ளியில் மாநகராட்சி ஊழியர்கள் ப்ளீச்சிங் பவுடர் மூட்டைகள், கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் வைக்கும் கிடங்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து சாஸ்திரி நகர் பொதுநல சங்கத் தலைவர் சாமி கூறியது: கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி முறையாக திறக்காமல் இருந்தது. பேரவைத் தேர்தலுக்கு பின் இப்பள்ளியில் முழுமையாக பூட்டு போட்டு மாநகராட்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பயின்ற மாணவர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். அதிகாரிகள் இப்பள்ளியை திறந்து மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறியது: மேற்கண்ட பள்ளியில் சேர்க்கை குறைவாக இருந்தது. இருப்பினும் கடந்த 6 ஆண்டுகளாக பள்ளியை நடத்தி வந்தோம். பெற்றோர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்கள் போட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அண்மையில் ஆவடி மாநகராட்சி சார்பில் பள்ளி கேட்டில் புதிதாக பூட்டு போட்டுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைத்தால் பள்ளி மீண்டும் செயல்பட வாய்ப்பு உள்ளது.

இது குறித்து ஆவடி மாநகராட்சி ஆணையர் அம்பிகா ஜெயின், பட்டாபிராம் சாஸ்திரி நகர் பள்ளிக்கூடப் பிரச்னை குறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Summary

A municipal corporation school lies shut due to a decline in student enrollment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.