கேரளத்தில் பள்ளி மாணவர்கள் 55 பேருக்கு மூச்சுத் திணறல்! மருத்துவமனையில் அனுமதி!
கேரளத்தில் பள்ளி மாணவர்கள் 55 பேர் திடீர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி...

கேரளத்தில் பள்ளி மாணவர்கள் 55 பேருக்கு திடீர் மூச்சுத் திணறல் - ENS
கேரளத்தில், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் 55 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டயம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பயின்று வரும் சுமார் 55 முதல் 60 மாணவர்களுக்கு இன்று (நவ. 18) காலை திடீரென மூச்சுத் திணறல், உடல் அரிப்பு மற்றும் பிற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக பள்ளி அதிகாரிகள் 8 அவசர ஊர்திகளை வரவழைத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடக்கப் பள்ளி முதல் பன்னிரெண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், அருகிலுள்ள தார் கலக்கும் ஆலையால் ஏற்பட்ட மாசுவினால் மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏற்கெனவே, அந்த ஆலையின் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென பஞ்சாயத்து தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நீதிமன்ற அனுமதியைப் பெற்று அந்த ஆலை இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
In Kerala, about 55 school students have been admitted to the hospital after suddenly experiencing difficulty breathing.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


