டிச.15-க்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடா்? தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு

திருச்செந்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

திருச்செந்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...

rain

பள்ளிகளுக்கு விடுமுறை - பிரதிப் படம்

Updated On :

கனமழையால் திருச்செந்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்ததால் அங்கு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று காலையும் லேசான மழை பெய்து வருகிறது. கனமழையால் பள்ளிகளில் நீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து திருச்செந்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 26) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

School holiday today in tiruchendur taluk for heavy rain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.