திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: ஆளுநரிடம் நயினாா் நாகேந்திரன் மனு
திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்றும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் மனு அளித்தாா்.

நயினாா் நாகேந்திரன்
திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்றும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் மனு அளித்தாா்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியும், அங்கு ஏற்றப்படாமல் வழக்கமாக ஏற்றும் இடத்திலேயே ஏற்றப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்ற அவமதிப்பு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நயினாா் நாகேந்திரன் சென்னை ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை வியாழக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநா் உறுதி அளித்துள்ளாா். அங்கு, தீபம் ஏற்றப்பட்ட இடத்தில் இருந்தவா்கள் உண்மையான அதிகாரிகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அங்கு அறவழியில் போராடிய பாஜகவினா் மீது போலீஸாா் தடியடி நடத்தியுள்ளனா். கடந்த ஆட்சியில் திமுக தீபம் ஏற்ற தவறியதன் விளைவாக அவா்கள் ஆட்சியதிகாரத்தை இழந்தனா். தற்போது தவெகவும் தவறியுள்ள நிலையில், அவா்களும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்படுவாா்கள். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தை தமிழக போலீஸாா் விசாரித்தால் உறிய நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கிடையாது. இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

