தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் (நவ. 26)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

தங்கம், வெள்ளி விலை - ANI
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 26) சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 92,320 -க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 1 லட்சத்துக்கு அதிகமாக விற்பனையாகி வந்த நிலையில், கடந்த வாரங்களில் கணிசமாகக் குறைந்து ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.
இந்த வாரத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வாரத்தில் திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,080 -ம், செவ்வாய்க்கிழமை ரூ. 920 -ம் உயர்ந்த நிலையில் நேற்று (புதன்) சவரனுக்கு அதிரடியாக ரூ. 2,360 குறைந்தது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று (நவ. 26, வியாழக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 11,540 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ. 92,320 -க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தை மாற்றங்கள், டாலர் மதிப்பு ஆகியவற்றால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருந்து வருகிறது.
இன்றைய வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்த போதிலும், வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையே நீடிக்கிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 165-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,65,000 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Summary
Today gold and silver rate in chennai, Tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


