கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கு விசாரணை: இருதரப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கு விசாரணையின்போது இருதரப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி என நீதிபதி கூறியது பற்றி...

TVK MLA from Kallakurichi

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் - கோப்புப் படம்

Updated On :

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏவுக்கு எதிரான வழக்கு விசாரணையை பிற்பகல் 3.30 மணிக்கு தள்ளிவைத்த நீதிபதி, விசாரணையின்போது, இருதரப்பு வழக்கறிஞர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ளார்

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு, தவெக எம்எல்ஏ தகாத குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக நாளிதழ்கள், ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங்கை விசாரணை அதிகாரியாகவும், நிர்வாகப் பிரிவு ஐஜி காமினியை கண்காணிப்பு அதிகாரியாகவும் நியமித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் விசாரணை தொடர்பான விவரங்களை வெளியிட செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை பிற்பகல் 3.30 மணிக்கு தள்ளிவைத்த நீதிபதி, விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட இருதரப்பு வழக்கறிஞர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை எனக்கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.

Summary

Kallakurichi MLA case: Permission granted only to lawyers from both sides

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.