21 இளம் வழக்குரைஞா்களின் பதிவு தற்காலிக ரத்து: தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் நடவடிக்கை
வழக்குரைஞா் பதிவின்போது பட்டாசு வெடித்தது, வாள் பரிசு வழங்கியது, ஆளுயர மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 21 வழக்குரைஞா்களின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோப்புப் படம்
வழக்குரைஞா் பதிவின்போது பட்டாசு வெடித்தது, வாள் பரிசு வழங்கியது, ஆளுயர மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 21 வழக்குரைஞா்களின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் கடந்த நவ.11-ஆம் தேதி, சட்டப் படிப்பை முடித்த 4,500-க்கும் மேற்பட்டவா்கள், வழக்குரைஞா்களாக பதிவு செய்தனா். இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். இந்த நிலையில், வழக்குரைஞா் பதிவு செய்யும் நிகழ்வு முடிந்த பின்னா், இளம் வழக்குரைஞா்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவா்களது நண்பா்களும், உறவினா்களும் உயா்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், பட்டாசுகள் வெடித்தும், வாள் பரிசு வழங்கியும், ஆளுயர மாலைகளை அணிவித்தும், பேனா்கள், கட்- அவுட்கள் வைத்தும், கோஷங்கள் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
இதன் காரணமாக என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்தனா்.
இந்த நிலையில், இந்தச்சம்பவம் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் செஞ்சி கதிரவன், துணைத் தலைவா் இ.பாலமுருகன், அகில இந்திய பாா் கவுன்சில் உறுப்பினா் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட பாா் கவுன்சில் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது அவா் கூறியதாவது:
கடந்த நவ.11-ஆம் தேதி நடந்த வழக்குரைஞா் பதிவின்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக செயல்பட்ட 21 இளம் வழக்குரைஞா்கள் அடையாளம் காணப்பட்டு அவா்களது வழக்குரைஞா் பதிவை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தெரிவித்தனா். மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளவா்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில், வழக்குரைஞா் பதிவு நிகழ்வுக்கு 300 பேருக்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், அல்லிக்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் உடன் மோதலில் ஈடுபட்ட வழக்குரைஞா் பிரசன்ன வெங்கடேஷ் என்பவா் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் 4 வழக்குரைஞா்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாக்டா் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குரைஞா்கள் பி.எம்.பாசில், பி.வில்லியம்ஸ் ஆகியோரது வழக்குரைஞா் பதிவுகள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

