திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம்! செய்திகள் - நேரலை

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ளது பற்றிய செய்திகள் உடனுக்குடன் நேரலையில்...

A lamp atop the Tirupparankundram hill: live news

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தடுப்புகள் அமைக்கும் பணியில் போலீசார். - DIN

Updated On :
4:31 am, 28 நவம்பர் 2026

தூணில் தீபம் ஏற்றும் பணிகள் தீவிரம்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு தேவையான தற்காலிக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, மலை மீதுள்ள தூணைச் சுற்றிலும் கம்புகள் கட்டப்படுகின்றன.

4:31 am, 28 நவம்பர் 2026

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வரவேற்பு!

திருப்பரங்குன்றம் மலைமேல் தீபம் ஏற்ற பாதுகாப்பு அளிக்க வந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மேளதாளங்களுடன் மலர் தூவி வரவேற்பு அளித்த கிராம பொதுமக்கள்.

Live blog image
4:31 am, 28 நவம்பர் 2026

திருப்பரங்குன்றம் மலை மேல் செல்லும் பக்தர்கள்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப தூணில் கார்த்திகை தீபம் இன்று(சனிக்கிழமை) மாலை ஏற்றப்பட உள்ள நிலையில் காலையிலிருந்து பக்தர்கள் மலை மேல் செல்ல தொடங்கியுள்ளனர் அவர்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசார்.

Live blog image
4:28 am, 28 நவம்பர் 2026

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் மதுரை வந்தடைந்தனர்!  

திருப்பரங்குன்றம் கோயிலின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் இன்று காலை மதுரை வந்தடைந்தனர்.

4:28 am, 28 நவம்பர் 2026

உச்சநீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நேற்றைய வழக்கின் விசாரணையில் கடும் கண்டனம் தெரிவித்தது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று (நவ. 28, சனிக்கிழமை) தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அறங்காவலா் குழு செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் குழுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தது.

மேலும், திருப்பரங்குன்றம் மலை, தீபத் தூண், தா்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சிஆா்பிஎப் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.