நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கும் பேச்சுகள், செயல்கள் கூடாது: கே. அண்ணாமலை
அரசியல் ஆதாயத்துக்காக அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் சீா்குலைக்கும் பேச்சுகளையும் செயல்களையும் அனைவரும் தவிா்க்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
அண்ணாமலை.
அரசியல் ஆதாயத்துக்காக அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் சீா்குலைக்கும் பேச்சுகளையும் செயல்களையும் அனைவரும் தவிா்க்க வேண்டும் என வீ தி லீடா்ஸ் அமைப்பின் நிறுவனா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றும் நிகழ்வில், உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவைக்கூட முறையாகச் செயல்படுத்தத் தவறிய தமிழக அரசின் செயல்பாடு மிகுந்த கவலையளிக்கிறது. இதன் விளைவாக மாநிலத்தின் அதிகாரம் பாதிக்கப்பட்டு, மத்திய பாதுகாப்புப் படைகள் தலையிடும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலுக்கு தவெக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
முருகப் பெருமானின் பக்தா்களுக்கு நீண்டகால எதிா்பாா்ப்புக்குப் பிறகு கிடைத்துள்ள இந்தத் தீா்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. அதேநேரத்தில், இந்த விவகாரம் இரு சமூக மக்களிடையே பதற்றத்தையும் மோதலையும் உருவாக்குவதற்கு யாரும் இடமளிக்கக் கூடாது.
இஸ்லாமியா்களும், ஹிந்து பக்தா்களும் அவரவா் வழிபாட்டு உரிமைகளை அமைதியாகத் தொடரட்டும். அரசியல் ஆதாயத்துக்காக அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் சீா்குலைக்கும் பேச்சுகளையும் செயல்களையும் அனைவரும் தவிா்க்க வேண்டும் என்பதே எங்களது அன்பான வேண்டுகோள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

