மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; உச்ச நீதிமன்றத்தின் அகந்தை: திருமாவளவன் விமர்சனம்!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்

VCK does not agree with the Supreme Court's stance on the Thiruparankundram 'deepam'

விசிக தலைவர் தொல். திருமாவளவன். - கோப்புப்படம்

Updated On :

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்

செங்கல்பட்டில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ”ஒரு சின்னத் தூண். அது நில அளவைக்காக சர்வே துறையினரால் நிறுவப்பட்ட ஒரு தூண். அதுபோல எண்ணற்ற பல தூண்கள் மலைப் பகுதிகளிலே இருக்கும். அப்போதுதான் சர்வே செய்பவர் அடையாளம் கண்டுபிடித்து அந்த இடத்துக்குப் போவார்; இல்லையென்றால் அதைக் கண்டுபிடிப்பது கஷ்டம்.

இதுபோன்ற தூண்கள் அங்கங்கே இருக்கும். அது சர்வே கல்தான்; நில அளவைக்கான கல்தான். தீபம் ஏற்றுவதற்கான தூணே இல்லை. தீபம் ஏற்றுவதற்கான தகுதியே இல்லை. ஒரே கல்லால் ஆனது. அதன் மேல் கொப்பரையை வைக்க முடியாது.

ஆனால் அங்கு தீபம் ஏற்றுவேன் என்று அடம் பிடிக்கின்றனர். வம்பிழுக்கிறார்கள். அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரையில் கொண்டுபோய், அந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ’நாங்க சொல்லி நீங்க கேட்க மாட்டீங்களா? நாங்க யார்?’ என்று கேட்கிறார்கள். இதுதான் ஈகோ. ஆங்கிலத்தில் 'ஈகோ', தமிழில் 'அகந்தை'.

’நாங்க சுப்ரீம் கோர்ட். எல்லா நீதிமன்றங்களையும் விட உயர்ந்த உச்சபட்சமான நீதிமன்றம். நாங்கள் ஆர்டர் போட்டால் நீங்கள் அதை நடைமுறைப்படுத்த மாட்டீர்களா? நாளைக்கே சிஆர்பிஎஃப் மூலம் மொத்த மலையையும் கையில் எடுத்துக்கொள். யார் யார் தீபம் ஏற்றவேண்டுமோ போய் ஏற்றுங்கள். கலெக்டர் 15-ஆம் தேதி வா, 14-ஆம் தேதி வா, எப்படி நீங்கள் செய்யாமல் இருக்கிறீர்கள்? உன்னைப் பார்த்துக்கிறேன், தீர்த்துக்கிறேன். நான் சொல்லி வேலை செய்ய மாட்டியா நீ? உங்க முதல்வர் சொன்னா நீ கேட்டுக்கொள்வாயா?’ என்று கேட்கின்றனர்.

அறங்காவலர் குழு கலைக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் எல்லோரும் இடைநீக்கம் என கலைத்துவிட்டனர். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலே ஒரு குழு.

இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏதேச்சதிகாரமான போக்கு. அது சர்வே கல்லா, தீபம் ஏற்றுகிற தூணா என்பதைக் கண்டுபிடித்த பிறகுதான் ஆணையை நீ பிறப்பித்திருக்க வேண்டும். நீ எடுத்த முடிவு தவறு. இன்று ஒரு முறை மட்டும் நீ ஏற்றிக்கொள் என்றால் என்ன, அது தீர்ப்பா?

இப்போது உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால் நாங்கள் அனைவரும் வாய் மூடிக்கொண்டு இருக்கவேண்டுமா? வேடிக்கை பார்க்க வேண்டுமா? அமைதியாக இருக்க வேண்டுமா? யாரோ இரண்டு பேர் கேட்பதற்காகத் தவறான ஒரு நிலைப்பாட்டை ஒரு உச்ச நீதிமன்றம் எடுத்தால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எந்த வகையிலே நியாயம்?

இதற்கு முன்பு நடந்த வழக்குகளில் எல்லாம், உயர் நீதிமன்றத்தில் போன விசாரணையில் இருந்த வழக்குகளில் எல்லாம், அப்போது இருந்த கோவில் நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்: ’அது தீபம் ஏற்றுகிற தூண் இல்லை. எங்களுக்கு நினைவு தெரிந்து அதில் ஒரு நாளும் நாங்கள் தீபம் ஏற்றியதில்லை’ எனச் சொல்லியிருக்கின்றனரா இல்லையா? தீர்ப்பிலே பதிவாகி இருக்கிறதா இல்லையா? வழக்கிலே பதிவாகி இருக்கிறதா இல்லையா?

இப்போது தீபமே ஏற்றப்படாத ஒரு கல் தூணில், அதற்குத் தகுதியே இல்லாத ஒரு கல் தூணில், அதைத் தாங்குவதற்கு சக்தியே இல்லாத ஒரு கல் தூணில் சின்ன விளக்கு வைத்துக் கொள்கிறோம். அப்படி என்ன வீம்புக்கு நீ வம்பிழுக்கிறாய்? அங்கு அவ்வளவு பெரிய கொப்பரையெல்லாம் வைக்க வேண்டாம். 300 லிட்டர் நெய்யெல்லாம் ஊத்த வேண்டாம். 150 மீட்டருக்கு காடா துணியால் திரி கூட வேண்டாம் என விளக்கை ஏற்றியுள்ளனர்.

இவர்கள் மதச்சார்பின்மை வெல்லட்டும் எனச் சொல்லமாட்டார்கள். ஏனென்றால், மதம் சார்ந்த நாடாக நாட்டை மாற்றுவதுதான் அவர்களின் உச்சபட்ச செயல்திட்டம்” என்று பேசியுள்ளார்.

Summary

Thiruparankundram lamp issue; the Supreme Court's arrogance: Thirumavalavan's criticism!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.