இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட தீபம்! பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம்!!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்நேற்று அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?

மாவட்ட ஆட்சியரை எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் முதல்வரின் நிர்வாகத் திறன்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருப்பது பற்றி....

Why hasn't the Chief Minister opened his mouth so far on the Thiruparankundram lamp issue? M.K. Stalin questions

திமுக தலைவர் ஸ்டாலின் - கோப்புப்படம்

Updated On :

கல்தூணுக்கு மாவட்ட ஆட்சியரை எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் முதல்வரின் நிர்வாகத் திறன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், #திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதல்வர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?

அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதல்வரின் நிர்வாகத் திறன்!

‘Comedy Show Performer’ முதல்வரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?

Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை!

ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்! என்று தெரிவித்துள்ளார்.

Summary

DMK President M.K. Stalin has questioned why the Chief Minister has not spoken out so far on the Thiruparankundram lamp issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.