துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜக
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவுக்கு பாஜக நன்றி தெரிவித்தது குறித்து...

வானதி சீனிவாசன் - கோப்புப் படம்
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் ஆதரவளித்த திமுகவுக்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, "திமுக துரோகம் செய்து விட்டதாக காங்கிரஸார் கூறுகின்றனர். திமுக ஆதரவுடன், அவர்களின் கட்சி ஊழியர்களின் உழைப்பில், அவர்களின் பணத்தில் வெற்றி பெற்று, திமுகவுக்கே காங்கிரஸார் துரோகம் செய்தனர்.
திமுகவுக்கு துரோகம் செய்தவர்களே, திமுக துரோகம் செய்ததாகப் பேசுகின்றனர். இது என்ன அநியாயம்?
மாநிலத்தில் இவர்களின் (காங்கிரஸ்) கட்சி எங்கு இருக்கிறது? இவர்களின் பலம் என்ன? இவர்களின் வாக்கு சதவிகிதம் என்ன? என்பதும் அனைவருக்கும் தெரியும். திமுக ஆதரவில் வெற்றி பெற்றுவிட்டு, அவர்களையே துரோகம் செய்பவர்கள் என கூறுகின்றனர்.
தென் மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்துவிடக் கூடாது என்றே திமுகவினர் நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதற்குத்தான் பிரதமரும் உள்துறை அமைச்சரும் சரியான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எந்த மாநிலத்தையும் வஞ்சிக்கும் எண்ணம் பிரதமர் மோடிக்கு இல்லை. எந்தவொரு இடத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்படவில்லை.
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கும் பெண்கள் பாதுகாப்பும் திமுக ஆட்சியில் இருந்ததுபோல தற்போதும் (தவெக) இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் கல் தூணில் தீபமேற்ற கடந்த திமுக அரசு பிடிவாதம் பிடித்தது. தவெகவும் அதைத்தான் செய்தது. ஆனால், இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தீபமேற்றப்பட்டு விட்டது.
50 சதவிகிதம் பெண்கள் இருக்கும் நம் நாட்டின் தொகுதி மறுவரையறையைக் கொண்டு வர ஆதரவளித்ததற்காகவே திமுகவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த நேரத்தில் ஆதரவு தெரிவிக்கும் அனைவருக்கும் எங்களின் நன்றிகள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Summary
BJP thanks DMK over the issue of the constituency delimitation bill
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

