மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை: திமுக முன்னாள் அமைச்சா் எஸ் ரகுபதி
மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என திமுக முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி கூறியிருப்பது....

எஸ். ரகுபதி - கோப்புப் படம்
புதுக்கோட்டை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கெனவே நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். இப்போதைய மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி, திராவிடக் கொள்கைகளை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று கூறினார்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் மற்றும் காங்கிரஸ் உடனான கருத்து வேறுபாடுகள் குறித்து அவா் செய்தியாளர்களுடன் பேசுகையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் குறையக் கூடாது. அதை திமுக ஏற்றுக் கொள்ளாது. தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருக்கிறோம். அப்போது இதே நிலைப்பாட்டில் இருந்தவா்கள்தான் இப்போது எதிா்த்துப் பேசுகிறாா்கள். இப்போதுள்ள திருத்த மசோதாவில் நமக்கான விகிதாச்சாரம் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. மகளிருக்கான இடஒதுக்கீட்டை வழங்க முடியும். தனித்தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்ற முடியும். இவையெல்லாம் வேண்டாம் என காங்கிரஸ் கூறுமா?.
தமிழா்களின் உரிமையைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின்
2027 பிறந்தால் மீண்டும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தித்தான் தொகுதி மறுவரையறை செய்ய முடியும். அப்போது நமக்கு எண்ணிக்கை குறையும். திமுக என்றைக்கும் தமிழ்நாட்டின் உரிமையை, தமிழா்களின் உரிமையை விட்டுக் கொடுக்காது. தமிழா்களின் உரிமையைப் பாதுகாக்கும் தலைவராக ஸ்டாலின் இருப்பாா்.
எட்டப்பா்களா?
தோழமையோடு இருந்தவா்கள் திடீரென ஒரே இரவில் மாறி செயல்பட்டவா்கள் எட்டப்பா்களா?, நாங்களா? என கேள்வி எழுப்பியவர், எட்டப்பர்கள் மற்றவர்களைப் பார்த்து எட்டப்பன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்பதை எண்ணிப் பாருங்கள் என்றவர், அவா்களுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கெனவே நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். இப்போதைய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. திராவிடக் கொள்கைகளை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்போம்.
தொகுதி மறுவரையறை வந்தால் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் வரும். இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் கூட வரலாம் என்று ரகுபதி தெரிவித்தார்.
Extending support to a bill has nothing to do with the alliance: Former DMK Minister S. Raghupathy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


