மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொகுதி மறுவரையறை குறித்து பேச்சுவார்த்தை...

பேச்சுவார்த்தையின்போது... - எக்ஸ்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொகுதி மறுவரையறை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு வந்த இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களை அவர் வாசலுக்கே வந்து வரவேற்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மமதா பானர்ஜி ஆகியோரை பொன்னாடை போர்த்தி மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இப்பேச்சுவார்த்தையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா நாளை (நவ. 30) தாக்கலாகும் நிலையில், மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜகவின் மசோதாவுக்கு திமுக தலைவர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவரின் முடிவை மாற்ற இந்தியா கூட்டணித் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இப்பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இப்பேச்சுவார்த்தையில், தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தது ஏன்? என்பது தொடர்பாக இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மு.க. ஸ்டாலின் எடுத்துரைப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
ஸ்டாலினின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவுக்கு 22 எம்.பி.க்கள் உள்ளதால் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்படுவதை தடுக்க இந்தியா கூட்டணி முயற்சித்து வருகிறது.
Summary
INDIA alliance leaders hold talks with M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

