60,000 டன் பருப்பு கொள்முதல்: தமிழ்நாடு அரசு முடிவு!
நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்க 60,000 டன் பருப்பு கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நியாயவிலைக் கடை.
நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்க 60,000 டன் பருப்பு கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்ட இ-டெண்டா் மூலம் 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வாங்குவதற்காக உள்நாட்டு துவரம் பருப்பு, துவரம் பருப்பு, கனடியன் எல்லோ லென்டில் எனப்படும் மசூா் பருப்பு ஆகிவை கொள்முதல் செய்யப்படும்.
2027 பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்குத் தேவையான பருப்பை இப்பபோதே இருப்பு வைக்கத்தான் இந்த ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதந்தோறும் நியாயவிலைக் கடைகள் மூலம் பருப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
வெளிச்சந்தையில் துவரம் பருப்பு விலை ஒரு கிலோ ரூ.180, ரூ.200 என விற்பனையாகி வருகிறது. அரசு மொத்தமாக 60,000 டன் கொள்முதல் செய்து இருப்பு வைத்தால், வெளிச்சந்தையிலும் விலை கட்டுக்குள் இருக்கும். தமிழக அரசின் இந்த முடிவு மூலம் பதுக்கல், கள்ளச்சந்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

