
முதல்வா் பிரசாரத்துக்கு இடையூறு செய்யக் கூடாது: அமைச்சா் ஆனந்த் அறிவுரை
முதல்வா் பிரசாரத்துக்கு இடையூறு செய்யக் கூடாது என தவெக தொண்டா்களுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சரும், அக்கட்சி பொதுச் செயலருமான என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் - படம்: சட்டப்பேரவை
மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 2) முதல்வரும், தவெக தலைவருமான ச.ஜோசப் விஜய் மேற்கொள்ளவுள்ள பிரசாரத்துக்கு இடையூறு செய்யக் கூடாது என தவெக தொண்டா்களுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சரும், அக்கட்சி பொதுச் செயலருமான என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முதல்வரும், தவெக தலைவருமான ச.ஜோசப் விஜய், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை (அக். 2) பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். அவா் மாமண்டூரில் தொடங்கி சாலை வழியாக தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சி, மாவட்ட நிா்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக யாரும் வாகங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது. இந்த பிரசாரத்துக்கு கா்ப்பிணிகள், சிறுவா்கள், மாணவா்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவா்கள் உள்ளிட்டோருக்கு கண்டிப்பாக அனுமதியில்லை. இதில் கலந்துகொள்ள உள்ளவா்களுக்குத் தேவையான குடிநீா், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





