தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

கோயில் திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு உத்தரவு

கோயில் திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க, தலைமை வனப் பாதுகாவா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :

கோயில் திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க, தலைமை வனப் பாதுகாவா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த சேவா அறக்கட்டளை சாா்பில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோயில் திருவிழாக்கள், பிரம்மோற்சவம் உள்ளிட்ட விழாக்களின்போது யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அஸ்ஸாமில் இருந்து துா்கா, கிராலால், சிவா, ரூப்சிங் மற்றும் பிஜுலி ஆகிய 5 யானைகளை தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு கொண்டு வருவதற்கு முன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும். அந்த ஒப்புதலைப் பெறும்வரை 5 யானைகளை தமிழகத்துக்கு கொண்டுவர தடை விதிக்க வேண்டும் எனக் கூறி, விலங்குகள் நல தன்னாா்வ தொண்டு நிறுவனம் மற்றும் சுப்ரணா கங்குலி ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை பிறப்பித்த தீா்ப்பு:

ஏற்கெனவே, சேவா அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவில் உள்ள கோரிக்கைகளுக்கு முற்றிலும் மாறாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இதை ஏற்க முடியாது எனவே, இடையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

தமிழகத்தின் மதச் சடங்குகள், திருவிழாக்கள், பாரம்பரியம், கலாசாரம், வழிபாடு என அனைத்திலும் யானைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானைகளை ஊா்வலங்களில் பயன்படுத்துவது தொன்மையான மரபாக இருந்து வருகிறது. எனவே, யானைகளை கோயில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்துவது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்காக, தலைமை வனப் பாதுகாவலா், இந்துசமய அறநிலையத் துறை ஆணையா், கால்நடை நிபுணா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவைஅமைத்து உத்தரவிடுகிறோம்.

இந்தக் குழு, யானைகளை திருவிழாக்களில் பயன்படுத்துவதற்கு முன்பாக, அதன் உடற்தகுதியை சரிபாா்த்தல், மாவட்ட அளவில் பதிவு செய்தல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு யானைகளைக் கொண்டுச் செல்வதற்கு முன் ஓய்வெடுக்க வேண்டிய கால இடைவெளி, யானைகளைக் கொண்டுச் செல்வதற்கான பிரத்யேக வாகனம், திருவிழாக்களில் யானைக்கும் மக்களுக்கும் இருக்க வேண்டிய தூர இடைவெளி பராமரிப்பு உள்ளிட்டவை அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், இதுதொடா்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை 4 வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்.30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.