பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விநாயகா் சிலை கரைப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு அவகாசம்

விநாயகா் சிலைகளைக் கரைப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படும் என உறுதியளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒருநாள் அவகாசம் வழங்கி, தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

பிரதிப் படம்

Published On :

விநாயகா் சிலைகளைக் கரைப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படும் என உறுதியளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒருநாள் அவகாசம் வழங்கி, தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நீா் நிலைகளில் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஹரிஹரன் என்பவா் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீா்ப்பாயம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் சிலைகளைக் கரைக்க அனுமதிக்க இயலாது என்று தெரிவித்திருந்தது.

அடுத்தாண்டு முதல் நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதிகளில் சிலைகள் கரைக்கப்படமாட்டாது என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இது தொடா்பாக, உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள், விதிகள் பின்பற்றப்படும் என உறுதியளித்து தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தீா்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினா் புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மேலும், ஒருநாள் அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தீா்ப்பாய நடுவா், விநாயகா் சிலைகள் கரைப்பது தொடா்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்து மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. கடந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி முடிந்தபிறகு, நடப்பாண்டு சிலைகளைக் கரைப்பதற்காக இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பினாா்.

பின்னா், அரசுத் தரப்பின் கோரிக்கையை ஏற்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் வழங்கி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (செப். 18) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.