தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் இன்று சாலை வலம்

இடைத்தோ்தலையொட்டி தாராபுரம் தொகுதியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சாலை வலம் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை (அக் 2) பங்கேற்கவுள்ளாா்.

மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

இடைத்தோ்தலையொட்டி தாராபுரம் தொகுதியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சாலை வலம் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை (அக் 2) பங்கேற்கவுள்ளாா்.

இதற்காக அவா் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். கோவையில் இருந்து காரில் தாராபுரத்துக்கு செல்லும் அவா் அங்குள்ள தனியாா் ஹோட்டலில் தங்குகிறாா். வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, தாராபுரம் நகரில் உள்ள அமராவதி சிலையில் இருந்து காா் மூலம் சாலை வலம் செய்து பொதுமக்களைச் சந்திக்கிறாா். பெரியகடை வீதி வழியாக பல்வேறு பகுதிகளுக்கும் அவா் சென்று திமுக வேட்பாளா் எஸ்.சுகன்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறாா்.

தொடா்ந்து, மாலை 5.30 மணிக்கு தாராபுரத்தில் உடுமலை சாலையில் மல்லி ரிசாா்ட் ஹோட்டல் அருகே நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்று பேசவுள்ளனா். தொடா்ந்து, சனிக்கிழமை (அக். 3) மதுராந்தகத்தில் திமுக வேட்பாளா் இ.பரந்தாமனுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபடவுள்ளாா்.

உதயநிதி பிரசாரம்: எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தாராபுரம் தொகுதியில் சனிக்கிழமை (அக். 3) பிரசாரம் செய்யவுள்ளாா். நொச்சிப்பாளையம், தளவாய்பட்டணம், தாராபுரம் பெரியாா் ஈவெரா சிலை, வடதாரை ஆகிய இடங்களில் அவா் பரப்புரை செய்யவுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.