“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு!டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் லவ்லினா!காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ கட்டமைப்புகள், பணியாளர்கள் உள்ளனர்: அமைச்சர் அருண்ராஜ்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதனை கையாள்வதற்கு தேவையான வசதிகள் உள்ளன என்பது குறித்து...

Government hospitals have adequate medical infrastructure and staff

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் கோ.க. அருண்ராஜ் - கோப்புப் படம்

Published On :

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதனை கையாள்வதற்கு தேவையான அனைத்து மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் உள்ளன என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் கோ.க. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தால் மக்கள் அனைவருமே அரசு மருத்துவமனையை நோக்கிப் பிரசவத்துக்காக வரக்கூடும். ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் கூடுதல் எண்ணிக்கையிலான பேஷன்ட்டுகளுக்கு எப்படிச் சிகிச்சை அளிக்க முடியும்... மருத்துவக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தி, மருத்துவ ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்க எதுவும் செய்யவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் இல்லை என தெரிவித்துள்ள திமுக மருத்துவரணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், அவரது குற்றச்சாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் கோ.க.அருண்ராஜ் பதிலளித்துள்ளார்.

அதாவது, தமிழ்நாடு பொது சுகாதார கட்டமைப்பில் தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் விரிவான நலத்திட்டங்களின் மூலமாக மகப்பேறு மற்றும் குழந்தை நலப்பராமரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 2015 - 2016 முதல் 2025 - 2026 ஆண்டு வரை நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கையில், அதிகபட்சமாக 2015 - 2016 இல் 9.47 லட்சம் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 6.31 லட்சம் பிரசவங்கள் (67%) அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றன.

ஆனால், தமிழ்நாட்டில் 2025 - 2026 இல் நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கை 7.80 லட்சமாக குறைந்துள்ளது. இவற்றில் 4.15 லட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றன.

தமிழ்நாட்டில் 2025 - 2026 ஆம் ஆண்டில் நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, இனிவரும் ஆண்டுகளில் சுமார் 6.31 இலட்சம் (80%) பிரசவங்கள் வரை கையாளக்கூடிய திறன் அரசு மருத்துவமனைகளுக்கு உள்ளது என்பது கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களோடு ஒப்பிடும்போது தெளிவாக தெரிய வருகிறது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை கையாளத் தேவையான மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர எந்நிலையிலும் குறைக்கப்படவில்லை.

மேலும், 130 பிரத்தியேக சீமாங் மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் ரூ.25 கோடி முதல் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்பட்ட விரிவான அவசரக்கால மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதனை கையாள்வதற்கு தேவையான அனைத்து மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் உள்ளன என அவர் கூறியுள்ளார்.

Government hospitals have adequate medical infrastructure and staff: Health Minister Arunraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.