முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் அருண்ராஜ்!

அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அதிகாரிகள் லிப்ட்டில் சிக்கிய சம்பவம் குறித்து...

Minister Arunraaj

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்

Published On :

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்ட்டில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அதிகாரிகள் சிறிது நேரம் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வருடன் நடைபெறும் காணொலி காட்சி வாயிலான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

இந்தக் கூட்டம் பழைய கட்டடத்தின் முதல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் உள்ள லிப்ட் மூலம் அமைச்சர் அருண்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் ஆகியோர் இரண்டாவது தளத்திற்கு செல்ல முயன்றனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லிப்ட் இரண்டாவது தளத்தில் நிற்காமல் சிறிதுநேரம் பாதியிலேயே நின்று, பின்னர் நேராக ஏழாவது தளத்திற்கு சென்று அங்கேயும் கதவுகள் திறக்கப்படாமல், மீண்டும் கீழே இறங்கி, ஆறாவது தளத்தில் கதவுகள் திறந்தன.

இதனால் சிறிது நேரம் லிப்ட்டிற்குள்ளேயே அமைச்சரும் அதிகாரிகளும் சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இதனைத்தொடர்ந்து, உடனடியாக ஆறாவது தளத்தில் இருந்து பத்திரமாக வெளியேறிய அமைச்சர், பழைய கட்டடத்தில் உள்ள லிப்ட் வழியாக சென்று, முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்ற காணொலி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அமைச்சர் லிப்ட்-ல் சிக்கிக்கொண்டபோது லிப்ட் திரையில் "MAINTENANCE","OUT OF SERVICE" என வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

An incident in which the Minister for Health and Family Welfare, Arunraj, and officials were briefly trapped in the elevator at the Erode District Collector's office has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.